நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தேமுதிக சார்பாக பிரேமலதாவும், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாமல் இருந்தார். கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்த போது, அவரது பிரச்சார வாகனத்தை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பயன்படுத்தி வந்தார். தற்போது தேமுதிகவில் இருக்கும் இரண்டு பிரச்சார வாகனங்களை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும், பிரேமலதாவும் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது விஜயகாந்தின் உடல்நிலை தேறி வருவதால் இனி வரும் தேர்தலில் அவரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தை விஜயபிரபாகரன் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜயகாந்த் மகனுக்கும் பிரச்சார வாகனம் வாங்கலாம் என்று யோசித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து சேட்டிலைட் டிவி, பெட், டைனிங் டேபிள்' என சகல வசதியுடன் கட்சி நிதியில் இருந்து புது பிரச்சார வாகனம் தேமுதிக சார்பாக வாங்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருவதாக சொல்கின்றனர்.