ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (09/11/2019) வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க, ஏகமனதான தீர்ப்பால் நாட்டில் ஒற்றுமை வலுப்பெறும். இதுவரை இருந்து வந்த மனக்கசப்பு முடிவுக்கு வந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு அதே இடத்தை ஒதுக்கியும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தீர்வு சிறந்த வழிமுறையாகும்.
அதனை அனைத்து தரப்பு மக்களும் ஏற்று, ஒற்றுமை வலுப்பெற செய்ய வேண்டும். காவி மயம் என்பது குறித்து ரஜினிகாந்த் கூறியது அவரது சொந்த கருத்து. அவர் பொது வாழ்வில் வரவில்லை, தனிக்கட்சி துவங்கவில்லை, அவரது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசுவதற்கு ஏதுமில்லை. அண்மையில் பிரதமரை சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்கான திட்டங்கள், முக்கிய பிரச்னைகளில் தமிழகத்துக்கான சிக்கல்களை தெரிவித்தேன்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி, கமாண்டோ பாதுகாப்பு திரும்பபெறப்பட்டாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசே தெளிவான விளக்கம் அளித்துள்ளதால் விமர்சிக்க ஏதுமில்லை. பண மதிப்பிழப்பால் மட்டும் பொருளாதார பின்னடைவு ஏற்படவில்லை. உலக அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவு என்பதை பிரதமர், நிதி அமைச்சர் விளக்கி உள்ளனர். பாஜக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதால் தான் கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் கிடைத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் போனதற்கு திமுக தான் காரணம். இந்த தேர்தலை நடத்த அதிமுக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா சந்திக்கிறது. தமாகா சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை துவக்கிவிட்டோம். கடந்த ஒரு மாதமாக அந்தந்த பகுதியில் நிர்வாகிகள் மூலம் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.
வரும் 22, 23, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக இதற்கான ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. வரும் 22 ஆம் தேதி திருச்சியில் 25 மாவட்டங்களுக்கும், 23 மற்றும் 25 ஆம் தேதி சென்னையில் மீதமுள்ள மாவட்டங்களுக்குமான நிர்வாகிகளை சந்தித்து போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்" என கூறினார் ஜி.கே.வாசன். பேட்டியின் போது பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
தி.மு.க.வால் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை- ஜி.கே.வாசன் பேச்சு!
ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று (09/11/2019) வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க, ஏகமனதான தீர்ப்பால் நாட்டில் ஒற்றுமை வலுப்பெறும். இதுவரை இருந்து வந்த மனக்கசப்பு முடிவுக்கு வந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு அதே இடத்தை ஒதுக்கியும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தீர்வு சிறந்த வழிமுறையாகும்.