Skip to main content

பேசும் போது குறுக்கிட்ட ஓபிஎஸ் மகன்! முதுகெலும்பு இல்லை உட்காருன்னு...கொந்தளித்த திமுக எம்.பி!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

 

dmk



இந்த நிலையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்த விவாதத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும் போது ஜனநாயகத்திற்கு விரோதமாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?; மாநில அரசை நகராட்சி போல மத்திய அரசு நடத்த முயற்சிக்கிறது” என்றார்.  பாஜக எம்.பி.க்கள் சிலர் குறுக்கிட்டு கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். அப்போது ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் குறுக்கிட்டார். அதற்கு திமுக எம்.பி. டி.ஆர் பாலு இது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம்; உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; உட்காருங்கள்” என்று  ஆவேசமாக கூறினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்