சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்திய ஜனநாயக கட்சியின் அவசர பொதுக்குழு இந்த வாரம் புதன்கிழமை கட்சி அலுவலத்தில் நடந்தது. பொதுக்குழுவின் முடிவின் திமுகவிற்கு 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவை திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெரிவிக்க வந்தேன். எங்களது ஆதரவு பற்றி விளக்கமாக பேசியிருக்கிறேன்.
இப்போது தமிழகம் இருக்கும் சூழ்நிலையில் மிகப்பெரிய மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை திமுக தலைவர் ஸ்டாலின் மூலமாகத்தான் ஏற்படும் என்று எனக்கு நன்றாக தெரியும். எனது கட்சியும் அதனை உணருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் குரலை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி தமிழகத்திற்கு பல நன்மைகள் செய்ய வேண்டும். அது உங்களால் முடியும் என்று சொல்லி, எங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறோம்.
இப்போது நாங்கள் வந்து எங்களது ஆதரவை தெரிவிக்கத்தான். திமுக கூட்டணிக்கு ஐ.ஜே.கே. ஆதரவு அளிக்கிறது என்பதை தெரிவிக்கிறது என்பதை திமுகு தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்தோம்.
ஐ.ஜே.கே.வுக்கு எத்தனை இடங்கள் என்று பேசப்பட்டதா?
அதைப்பற்றி எதுவும் இப்போது பேசவில்லை. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை தெரிவித்தோம். எங்கள் பொதுக்குழுவின் முடிவை சொல்லுவதற்கு வந்தேன்.
பாஜக கூட்டணியில் நீடித்த நிலையில் திடீரென விலகுவதற்கு என்ன காரணம்?
என்ன காரணம் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கும். பாஜக கூட்டணியில் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த, இம்சித்துக்கொண்டிருந்த, தனிப்பட்ட முறையிலும், பல்கலைக்கழகத்திற்கும் தொல்லைக்கொடுத்து வந்திருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதால் நாங்கள் பாஜக கூட்டணியில் தொடர முடியாது. இவ்வாறு கூறினார்.