காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்விகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ’’காவிரி விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் அதிமுக எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வர். ஆனால், ராஜினாமா செய்வதற்காகவா மக்களை சந்தித்து வாக்குகளை வாங்கினோம். காவிரி விவகாரத்தில் தார்மீக ரீதியாக கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும். போராடி, வாதாடி மத்திய அரசிடம் இருந்து உரிமைகளை பெறுவதே பதவிக்கு அழகு. கமலஹாசன் பதவியில் இல்லாததால் பதவி விலகச்சொல்லி வலியுறுத்தி வருகிறார். ஆட்சியை கவிழச்செய்து குறுக்கே புகுந்துவிடலாம் என நினைக்கிறார் கமல்ஹாசன்’’என்று தெரிவித்துள்ளார்.