Skip to main content

பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... எதிர்ப்பு தெரிவித்த துரைமுருகன்? ஸ்டாலின் எடுத்த முடிவு! 

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

வரும் சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தி.மு.கவிற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம் பல்வேறு அதிரடி மாற்றங்களை திமுகவில் கொண்டுவரத் திட்டம் போட்டு வருவதாகச் சொல்கின்றனர். குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கின்றனர்.   

 

dmk



இதனால் வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற முடிவை திமுக தலைமையிடம் கூறிவருவதாகச் சொல்கின்றனர். அதோடு தேசிய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை திமுக சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுகவிடம் பிரசாந்த் கிஷோர் டீம் கூறிவருவதாகத் தகவல் வருகின்றனர். ஆனால் திமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் இந்த ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக திமுகவில் சீனியர்களாக இருக்கும் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட பலர் இந்த முடிவை எடுக்க வேண்டாம் என்று ஸ்டாலினிடம் அறிவுறுத்துவதாகச் சொல்கின்றனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் திமுக வலுவான கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று திமுக சீனியர்கள் கூறிவருவதாகக் கூறுகின்றனர். 

ஆனால் பிரசாந்த் கிஷோர் டீம்  திமுக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கூட்டணிக் கட்சிக்குக் கொடுக்கும் தொகுதிகளில் உட்கட்சி பூசல் காரணமாக வெற்றி வாய்ப்பு குறையவும் வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் திமுக தலைமை தேர்தல் நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்று இந்த ஐடியாவை ஆறப்போட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்