Published on 01/07/2019 | Edited on 01/07/2019
வரும் ஜூலை 24ம் தேதியுடன் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு சென்ற ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக மூன்று உறுப்பினர்களையும், அதிமுக மூன்று உறுப்பினர்களையும் தேர்வு செய்து அனுப்பலாம். இந்தத் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஒரு இடம் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.