Skip to main content

நீ ரெடியா, நாங்களும் ரெடி... தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக... கோபத்தில் தேமுதிகவினர் எடுத்த அதிரடி முடிவு! 

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று (19.12.2019) வெளியானது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக முதல்முறையாக பறக்கும் படையை மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
 

admk



இந்த நிலையில் வேட்புமனு தாக்கலில் போது அதிமுக கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வருவதாக கூறுகின்றனர். இது பற்றி விசாரித்த போது, ஒரத்தநாடு ஒன்றியத்தின் 31 வார்டுகளில் தே.மு.தி.க.வுக்கு ஒரு வார்டை மட்டும் ஒதுக்கினார் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான எம்.பி.வைத்திலிங்கம். சரி, இதாவது கிடைச்சதே என ஆறுதல்பட்டுக் கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4ஆவது வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தயாரானார் மாவட்ட மாணவரணி து.செ.அருள்தாஸ். "நீ ரெடியாயிட்டியா, நாங்களும் ரெடியாயிட்டோம்' என்ற கணக்குடன், அதே வார்டுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரையும் வேட்புமனு தாக்கலுக்கு அனுப்பிவிட்டார்கள்.


இத்தோடு விட்டாலும் பரவாயில்லை, தே.மு.க.வைச் சேர்ந்த சிலரை ‘கரெக்ட்’ பண்ணி, "தாஸு வேட்புமனு வேணாம் தாஸு' எனச் சொல்ல வைத்துவிட்டனர். வைத்தியின் இந்த ஷாக் வைத்தியத்தால் நொந்து போன அருள்தாஸ், "ஒரத்தநாடு ஒன்றிய தே.மு.தி.க.வினர் ஒட்டுமொத்தமாக கட்சியைவிட்டே விலகப் போறோம்' என்கிறார்.

 

சார்ந்த செய்திகள்