Skip to main content

திவாகரன் கட்சி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை தெரியுமா? அதிமுகவினர் ஷாக்!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

அ.ம.மு.க.வெல்லாம் ஒரு கட்சியா' என மேடைகளிலும் விவாதங்களிலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. புள்ளிகள் பேசினாலும், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு அ.ம.மு.க.வும் முக்கிய காரணம் என்பதை நெருக்கமாக பேசும்போது ஒத்துக்கொள்கின்றனர். "பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. களம் கண்டது, அ.தி.மு.க. தோற்றது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை. அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. இப்ப உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. நின்றதும் அ.தி.மு.க. பாதிக்கப்பட்டிருக்கு'' என்கிறார்கள்.
 

admk



உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க.விற்கு பொதுவான சின்னம் இல்லை என வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள்தான் சொன்னார்கள். அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யக்கூட எங்களுக்கு நேரம் தரவில்லை. கட்சி சார்பாக போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு சின்னங்களில்தான் போட்டியிட்டோம்'' என்கிறார் அ.ம.மு.க.வின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன்.


மொத்தம் 5040 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 4710 பதவிகளுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்தோம். அதில் 94 பதவிகளில் நாங்கள் வெற்றிபெற்றோம். கடலூரில் ஐந்து பேர், திருவண்ணாமலையில் 6 பேர், தேனியில் 5, புதுக்கோட்டையில் 5, மதுரையில் 7, சிவகங்கையில் 8, தஞ்சாவூரில் 10, தூத்துக்குடியில் 14 என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இது தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் 16 முதல் 19 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளோம்'' என்கிறார் அ.ம.மு.க. தலைவர்களில் ஒருவரான வெற்றிவேல்.

திவாகரனின் அ.தி.க.வும் உள்ளாட்சித் தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அ.ம.மு.க.வினரை வளைக்க அ.தி.மு.க. வலைவீசி வருகிறது.


 

 

சார்ந்த செய்திகள்