Skip to main content

மண்ணின் மைந்தனாக இடைத்தேர்தலில் போட்டி... டைரக்டர் கவுதமன்

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

 

வரும் அக்டோபர் 21ஆம் தேதி விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக சார்பில் விக்கிரவாண்டியின் நா.புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் வெ.நாராயணன் ஆகியோர் போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

 

director



இந்த நிலையில் திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியை நடத்தி வருபவருமான கவுதமன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியில், ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டமாக இருந்தபோது, நானும் இந்த மண்ணின் மைந்தனாக இருந்துள்ளேன். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இந்த தொகுதி மக்கள் என்னை வெற்றிப் பெற வைப்பார்கள். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பணத்தால் வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். 
 

போர் வீரனாக இருந்தால் களத்தில் நிற்க வேண்டும். அப்போதுதான் வெற்றி தோல்வியை உணர முடியும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே நான் விக்கிரவாண்டியில் போட்டியிடுகிறேன். வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.