





விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தத் தலைவருமான என். சங்கரய்யாவின் 100வது பிறந்தநாள் நாளை (15.07.2021) கொண்டாடப்படவிருக்கிறது.
இதையொட்டி சிபிஐஎம் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். நேற்று (13.07.2021), ‘மக்கள் பணியில் சங்கரய்யா’ என்கிற குறுந்தகடை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் சிபிஐஎம் தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று அக்கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழு, விருகம்பாக்கம் பகுதிக் குழு சார்பாக அன்னை சத்யா நகரில் அவரின் 100வது வயதைக் குறிக்கும் விதமாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சி.பி.ஐ.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு முதல் மரக் கன்றை நட்டு தொடங்கிவைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் எஸ். கந்தன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.