திமுக மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி எச்சரிக்கையால் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு கூலி முறையாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம், அறிஞர் அண்ணா நகர் கூட்டுறவு சங்கம், கமலா நேரு அஞ்சுகம் மாபோல் சிலம்பு செல்வர் சித்தயங்கோட்டை காந்திஜி நம் நாடு நெசவாளர் சங்கம் உட்பட எட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் 70 நாட்களாக சின்னாளபட்டியில் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் மற்றும் பால்வளம் வழங்காததால் அவர்கள் வறுமையில் வாடி வந்தனர். சின்னாளபட்டி கைத்தறி நெசவாளர்கள் மாநில துணை பொதுச் செயலாளர் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ பெரியசாமியிடம் தங்களுக்கு முறையான கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து ஐ.பெரியசாமி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு சேலை நெய்ததற்காக வழங்கப்பட வேண்டிய கூலித் தொகையை நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்தும் கூட்டுறவு சங்கங்கள் முறையாக நெசவாளர்களுக்கு நூல் மற்றும் பாவுகள் வழங்குவதை வழங்காததை கண்டித்து அறிக்கை வெளியிட்ட தோடு கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு கூட்டுறவு சங்கங்கள் முன்பு திமுக போராட்டம் நடத்தப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
அதையடுத்து உடனடியாக சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள் கடந்த 70 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி தொகை யை உடனடியாக வழங்கினார்கள். குறிப்பாக கமலா நேரு அஞ்சு கம்.ம.பொ. சிலம்பு செல்வர் ஆகிய கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூலியாக பெற்றன. இப்படி நிறுத்தி வைக்கப்பட்ட நெசவாளர்களின் கூலித் தொகை கிடைத்ததைக் கண்டு ஐ.பெரியசாமிக்கு ஒட்டு மொத்த நெசவாளர்களும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.