Skip to main content

இப்படி ஒரு அமைச்சர் இருக்காரா? அதிமுக அமைச்சரை விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா அதிமுக சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அதிமுக அமைச்சர் பாஸ்கரன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழக அமைச்சர்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவித்தோம் என்றும் பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக செல்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுக அமைச்சர் பாஸ்கரின் கருத்தால் பாஜகவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீப காலமாக அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது என்கின்றனர். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், சிறுபான்மை மக்கள் எங்களை ஒதுக்கினாலும் நாங்கள் ஒதுக்க மாட்டோம் என கூறினார். மேலும், தமிழக அமைச்சரவையிலே எல்லோரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எம்.எல்.ஏ, சேர்மனை, தன்னை சட்டையை பிடித்து கேட்கலாம் எனவும் கூறியுள்ளார். 

 

bjp


bjp



அதிமுக அமைச்சர் பாஸ்கரின் கருத்துக்கு, நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாஸ்கரன்னு ஒருத்தர் அமைச்சரா இருக்காரா⁉️ ஹல்லோ ராஜ்பவனா என்று கூறியுள்ளார். இந்த கருத்து பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறிய கருத்துக்கு பதிலாக எஸ்.வி.கருத்து அமைந்துள்ளது என்கின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்