Published on 16/11/2018 | Edited on 16/11/2018

மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆர்எஸ்எஸ் முகாம்கள் நடத்தவும், அரசு உத்தரவை ரத்து செய்துவிட்டு, அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் அந்த முகாம்களில் பங்கேற்க அனுமதி கொடுப்பதையும் தடை செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் மயமாகியுள்ள அரசு நிர்வாகத்தை சுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்ற இந்த அறிக்கையின் வாசகத்தை நீக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ் சிந்தனையுள்ள சிலர் கூறுகிறார்கள் என்றும் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.கே.ஹரிபிரசாத் அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.