Published on 08/10/2019 | Edited on 08/10/2019
![Radha Ravi](http://image.nakkheeran.in/cdn/farfuture/D2rqp-Lnj0ygYBZCqH3h7GBFd3TFJQfe5yi7xZ_DDBw/1570522940/sites/default/files/inline-images/Radha%20Ravi.jpg)
காராத்தே தியாகராஜன் தனது பிறந்தநாளை இன்று தனது இல்லத்தில் கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராதாரவி, ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். நான் அதிமுகவில் இருக்கிறேன் என்று பார்க்க வேண்டாம். அதிமுக, பாஜக எல்லாம் ஒரே கூட்டணிதான். இதில் ரஜினியும் இணையும்போது ஒன்றாக பணியாற்றுவோம் என்றார்.