Skip to main content

'பொது சிவில் சட்டம் கடும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது' - முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

'Common civil law poses a serious threat' - Chief Minister M.K.Stal's letter

 

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேபோல் திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  அதிமுகவும் இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.

 

இந்நிலையில் தேசிய சட்ட ஆணையத்தின் தலைவரும் நீதியரசருமான ரிதுராஜ் அவஸ்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிடுமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில், 'பொது சிவில் சட்டம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றத்திற்கு ஊறு விளைவிக்கும். உரிமை வாய்ப்புகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழலை ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான முன்னேற்றத்திற்கு பொது சிவில் சட்டம் வழிவகுக்காது. நமது நாட்டின் வளமான பன்முகத்தன்மையை நாம் நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும்.

 

பொது சிவில் சட்டம் கடும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது. சமூக கட்டமைப்பிற்கு சவால் விடுக்கிறது. அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் முரணானது. நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்துக்கும் பொது சிவில் சட்டம் வழிவகுத்துவிடும். பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவ மத அடையாளத்தை அழிக்கும் வகையில் சட்டத்தை செயல்படுத்த முயற்சி நடக்கிறது. செயற்கையான ஒரே மாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்கும் முயற்சியாகவே இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. பொது சிவில் போன்ற எந்த சட்டத்தையும் திணிக்கும் முயற்சியும் மத விவகாரங்களில் அரசின் அத்துமீறலாகவே கருதப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்