துணை முதல்வர் ஓ.பி.எஸ். சென்ற அமெரிக்கப் பயணம் எடப்பாடிக்கு டென்ஷனை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இப்படியொரு டூர் போனால் சூடேற்றாமல் இருக்குமா என்று கட்சிக்குள் பேசி வருகின்றனர். அரசு முறைப் பயணமாக அதிகாரிகள் சிலருடன் அமெரிக்கா டூருக்கு சென்ற ஓபிஎஸ் முதலில் தன் மனைவியை மட்டுமே அழைத்துச் செல்வதாக திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில்தான் தன் மகனான ரவீந்திரநாத் எம்.பி.யை யும் அழைத்து சென்றுள்ளார்.அமெரிக்கா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஓ.பி.எஸ்., அங்கெல்லாம் தனக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் தன் மகன் ரவீந்திரநாத்துக்கும் தரவேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்து நிறைவேற்றியதை தெரிந்து கொண்ட எடப்பாடி, எரிச்சலாகியிருக்கிறார்.
இந்த நிலையில் முத்தலாக் தடைக்கு ஆதரவாகப் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மக்களவையில் இதற்கான விவாதத்தின் போது பேசிய அ.தி.மு.க உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத், 'இந்த மசோதா பெண்களுக்குச் சம உரிமை வழங்கும்' என்று பேசினார். அதேசமயம் மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராகப் பேசியிருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, 'முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்துப் பேசிய ஓ.பி.ரவிந்திரநாத் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று ஓ. பன்னீர்செல்வமே பேசியிருந்தாலும் தவறு தவறுதான்' என்றார். இது அதிமுகவிற்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி தன மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது ஓபிஎஸ் தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.