கடலூர் மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாரும், முன்னாள் அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமாகிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் சமூக இடைவெளி கடைப்பிடித்து மின் கட்டண குளறுபடிகளைக் கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கட்சியினர் கறுப்புக் கொடியுடன் கலந்துகொண்டு பாதகைகள் ஏந்தி தமிழக அரசுக்கு எதிராகக் கோசங்களை எழுப்பினார்கள்.
சிதம்பரத்தில் நகர தி,மு,க, சார்பில் தெற்கு வீதியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், கரோனா காலத்தில் ஏழைகளுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், வார்டு செயலாளர் மணி, வார்டு பிரதிநிதிகள் ராஜா, செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், துணைச்செயலாளர் ஜோதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஸ்ரீதர், அகரநல்லூர் ராஜா ஆகியோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்
இதேபோல் சிதம்பரம் நகரத்தில் வடக்கு மெயின் ரோட்டில் நகர துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் பேரூந்து நிலையம் அருகே மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், காந்திநிலை அருகே மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் நகரத்தில் உள்ள 33 வார்டுகளிலும் வார்டு கிளைச் செயலாளர்கள் தலைமையில் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.