Skip to main content

அ.தி.மு.க. மீது மோடியும், மோடி மீது அ.தி.மு.க.வும் கடுப்பு!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

முதல்வர் எடப்பாடியின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் கோபம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே வருதுன்னு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டு வந்த உயர் சாதியினர், இந்தத் தேர்தலில் நேரடியாகவே பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இதை பா.ஜ.க.வின் ஓட்டு வங்கியா நிலைநிறுத்த மேலிடம் முயற்சிக்குது. ஆனாலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி யால தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பலையைக் கட்டுப்படுத்த முடியல. அதனால்தான் தமிழகத்தில் கட்சிக்குப் பெரிய பின்னடைவுன்னு பி.ஜே.பி. மாநில தலைமை ரிப்போர்ட் கொடுத்திருக்குது. 

 

modi



அதோடு இ.பி.எஸ். தலைமையிலிருப்பது செயலிழந்த- ஊழல் ஆட்சிங்கிறது தான் பா.ஜ.க.வின் பார்வை. இதையெல்லாம் ஸ்மெல் பண்ணிய எடப்பாடி, குருவாயூரப்பனை தரிசிக்க மோடி வந்தப்ப, அவருக்கு துணையா வந்த கேரள கவர்னர் சதா சிவம் மூலமா சமாதான சமிக்ஞை போட ப்ளான் பண்ணினாரு. ஆனா மோடியோ சதாசிவம் இதுபற்றி பேசுனப்ப கண்டுகொள்ளவே வில்லை. அதனால இப்ப அ.தி.மு.க. மீது மோடியும் மோடி மீது அ.தி.மு.க.வும் கடுப்புல இருக்குனு சொல்லிக்கிறாங்க.

சார்ந்த செய்திகள்