இந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு திமுக தவிர்க்க முடியாத சக்தியாக திமுக கட்சி உருவெடுக்கும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நம்புகின்றனர்.இந்த நிலையில் திமுகவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில ஆளும் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக நடைபெறும் நிகழ்வுகள் அதை நிரூபிக்கின்றன.ஏற்கனவே சிறுபான்மையினரின் ஆதரவு பெற்ற கட்சி என்று திமுகவிற்கு ஒரு இமேஜ் உள்ளது.இந்த இமேஜை உடைக்கும் வகையில் கமல் நேற்று பிரச்சாரத்தின் போது இந்து தீவிரவாதி என்று கூறி சிறுபான்மையினர் வாக்குகளை பெரும் வகையில் அவர் ஈடுபட்டது திமுகவின் அந்த இமேஜை உடைக்க தான் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இப்போது நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடியுடன் ஸ்டாலின் நெருக்கமாக இருக்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறது பாஜக என்று இன்னொரு பேச்சும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள திமுக மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கும் சந்திரசேகர ராவ்வை எதற்காக சந்திக்கச் சம்மதித்தார் என்ற கேள்வியை பாஜக எழுப்பி திமுக, காங்கிரஸ் கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டுள்ளது.இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுகவை குறி வைத்து ஆளும் தரப்பு நடத்தும் நாடகம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.