விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படும் என்று ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 7-ந் தேதி வரை நடக்கும். அதுக்குப் பிறகுதான் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்னு சொல்லப்படுது. இந்த நிலையில் பா.ம.க. அன்புமணிக்கு எதிரான சி.பி.ஐ. வழக்கில், கீழ்க்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் அன்புமணி மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதைத் தனக்குச் சாதகமான அம்சமாகக் கருதும் அன்புமணி, மத்திய அமைச்சரவையில் தனக்கு ஒரு இடத்தை வாங்கியாகணும்னு தீவிரம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அமித்ஷாவிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டு காத்திருக்காரு. அதே போல ஓ.பி.எஸ்.சும் தன் மகனுக்கு மத்திய மந்திரி பதவியை வாங்கியே ஆகணும்னு டெல்லித் தொடர்புகளை வைத்து, லாபி பண்ணிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வோ, தமிழகத்தில் தங்களை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வைக்காத, இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு எதுக்கு மந்திரி பதவியைத் தூக்கிக் கொடுக்கணும்னு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிகின்றனர்.