கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும்
— H Raja (@HRajaBJP) May 19, 2020
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன் விமர்சித்தது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை டி.வி. விவாதத்தில் பா.ஜ.க. பொறுப்பாளர் அவமதித்ததை வி.சி.க. வன்மையாகக் கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பா.ஜ.க.வின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா இந்தச் சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், என்ன திருமாவளவன் அவர்களே உங்களைப் போல பா.ஜ.க.காரர்கள் நாகரீகமாக பேசலை என்கிறீர்களா? என்றும், கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat (பழிக்குப்பழி) நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க.வின் எச்.ராஜா கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.