அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு ரஜினியின் இந்த பேச்சு அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்துக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். அதில், திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை என்றும் பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் ரஜினி மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
இந்துக்களே ஈ.வெ.ரா. திக, திமுக வை புறக்கணிப்போம் pic.twitter.com/r8qQZVGBoE
— H Raja (@HRajaBJP) January 19, 2020
ஈ.வெ.ரா. மற்றும் திக வினரின் இந்து விரோத செயல்களைச் சுட்டிக் காட்டினால் அது காவிச் சாயமாம் பாஜக வின் குரலாய் ஆக என்ன அறிவு ஜீவிகள் இவர்கள். @PTTVOnlineNews
— H Raja (@HRajaBJP) January 19, 2020
இந்த நிலையில் மீண்டும் திமுக மற்றும் திராவிட கட்சிகளை சீண்டும் வகையில் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில், இந்துக்களே ஈ.வெ.ரா. திக, திமுகவை புறக்கணிப்போம் என்றும், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பவர்கள் அனைவருமே தேசவிரோதிகள் என்றும், இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 - ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 - ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பாக திமுக மற்றும் திராவிட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.