Published on 26/06/2019 | Edited on 26/06/2019
நாடாளுமன்றத்தில் கூட்ட தொடரில் அமித்ஷா தூங்குவது போல் இருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்ற சபையில் பேசிக்கொண்டிருக்கும் போது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தூங்குவது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்நிலையில் கடந்த 9 ஜனவரி 2019 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, இது நடந்ததாகவும், அப்போது அங்குள்ள கேமராவில் பதிவான காட்சியில் அமித் ஷா கண்ணை மூடிய போது இக்காட்சி எடுக்கப்பட்டது என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது செல்போனை பயன்படுத்தியது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது சம்பந்தமான போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் ஏன் அமித் ஷா, அவையில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு எதுவும் கூறவில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர்.