கரோனா வைரஸ் பரவி நேரத்திலும் கூட தமிழ்நாட்டில் எந்த விதத்தில் அழுத்தமாகக் கால் ஊன்றலாம் என்கிறது தான் பா.ஜ.க.வின் வியூகம். அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட்டான போதே பா.ஜ.க. தன்னோட அசைன்மென்ட்டை ஆரம்பித்துவிட்டனர். அதன்பிறகு நடந்த அரசியல் மாற்றங்களெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது தான். தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏகூட பா.ஜ.கவுக்கு இல்லை என்றாலும், தாங்கள் சொல்றதையெல்லாம் உடனடியாகச் செய்யக்கூடிய அரசாங்கம் கைவசம் இருக்கிறது. அதை வைத்து, அப்படியே பலமாகக் கால் ஊன்றிட வேண்டும் என்று ப்ளான் செய்து வருகின்றனர். அதனால், எடப்பாடி சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்ட அமித்ஷா அதற்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதோடு வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதுதான் பா.ஜ.கவின் பிரதான லட்சியம். பா.ஜ.க.வின் மேலிட பிரதிநிதி முரளிதரராவ் அதை ஓப்பனாவே பேசினார். தமிழக பா.ஜ.க.வுக்கு தரப்பட்டிருக்கும் அஜெண்டாவும் அதுதான். அதுக்கு ஏற்றபடி, அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்து வலுவாக்குவதோடு, பா.ஜ.க.வின் இமேஜையும் இங்கே முடிந்தவரை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று டெல்லி நினைக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் நடக்கும் கரோனா நிவாரணப் பணிகளைக் கவனிக்க ஸ்பெஷலாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வாலை நியமித்துள்ளார் மோடி என்று சொல்லப்படுகிறது.