மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியான பா.ஜ.க.வின் தமிழக டீம் கரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் என்ன செய்கிறது என்று விசாரித்தபோது, தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் கடந்த 12-ந் தேதி வீடியோ காலில் ஆலோசித்த பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், நூறு நாள் திட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் மத்திய அரசு அறிவித்த நிதி உதவி, போய்ச் சேர்ந்ததா என்று விசாரித்ததோடு, அதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்கும்படி, மாநிலத் தலைவர் முருகனிடமும், எக்ஸ் எம்.பி. நரசிம்மனிடமும் கேட்டுக் கொண்டார்.
அப்போது, மோடி உத்தரவுப்படி, தமிழக அரசை எதிர்பார்க்காமல் முடிந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் நாங்கள் மும்முரமாக இறங்கி இருக்கோம் என்று தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் முரளிதரராவிடம் தெரிவித்ததோடு, தமிழகம் முழுக்க பல இடங்களிலும் குழு அமைத்து செயல்படுவதாக கூறியுள்ளனர்.