Skip to main content

60 எம்.எல்.ஏ.க்கள்... தொண்டர்களை உற்சாகப்படுத்தும் பாமக நிர்வாகிகள்...

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் கட்சியின் புதிய மாவட்ட செயலாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக் குழு தலைவர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாவட்ட செயலாளர் சசிகுமாரை அறிமுகம் செய்து வைத்தார்.

 

pmk



 

தொடர்ந்து அவர் பேசுகையில், மருத்துவர் ராமதாஸ் இந்த சமூகத்திற்கும், கட்சியினருக்கும் யாரும் செய்யாத வகையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரைப் பற்றிய சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வேதனை அளிக்கிறது.
 

அதே நேரத்தில் தற்போது தமிழக அளவில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் ஒன்றிய கவுன்சிலர் எனப் பல்வேறு பதவிகளை பெற்றுள்ளனர். கூட்டணி தர்மத்திற்காக நாமும் பல இடங்களை விட்டுக் கொடுத்துள்ளோம். எனவே வரும் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 60 எம்எல்ஏக்கள் வெற்றிபெற்று வந்துவிட்டால் தமிழகத்திற்கு அன்புமணி தான் முதல்வர். நான் அமைச்சர் ஆகிவிடுவேன். நீங்கள் எல்லாம் என்ன ஆவீர்கள் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள் என கேட்டு உத்வேகத்துடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் வலியுறுத்தினார்.


 

 

தமிழக முதல்வராக அன்புமணியை அமரவைக்க அனைவரும் கட்சியின் ஏற்றத்தாழ்வுகளை மறந்து பணியாற்ற வேண்டும் என உற்சாகப்படுத்தினார். அப்போது கட்சியினர் ஒருவர் அவருக்கு சால்வை அணிவித்து முதலில் அடிக்கடி மாவட்ட செயலாளர்களை மாற்றுவதை நிறுத்துங்கள். இப்படி இருந்தால் நம்மால் வெற்றி பெற முடியாது. நிரந்தரமாக ஒருவரை நியமியுங்கள் என மைக்கை பிடித்து பேசியபோது, அனைவரும் இதற்கு கைதட்டி வரவேற்றனர். இதனைதொடர்ந்நு மாநில துணை பொது செயலாளர் அசோக்குமார், மாநில நிர்வாகிகள் சந்திர பாண்டியன், தேவதாஸ் படை ஆண்டவர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேசினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்