திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜோதிமுருகன் போட்டி போடுகிறார். இவர் டிடிவியின் தீவிர ஆதரவாளர் என்பதால் இத்தொகுதியை ஜோதி முருகனுக்கு டிடிவி ஒதுக்கி இருக்கிறார். அதன் அடிப்படையில், ஜோதிமுருகனும் தேர்தல் களத்தில் குதித்து வாக்காள மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
முன்னதாக திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார் என்று நக்கல் செய்த டிடிவி பின்னர், தனது கட்சி வேட்பாளர் பெயரை மாற்றி கூறி வாக்கு கேட்டதை கண்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து ஜோதிமுருகனை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த டிடிவி தினகரன் பேருந்து நிலையம் முன்பு வந்தபோது, கூடியிருந்த தொண்டர்கள் தினகரன் வாகனம் முன்பு கூடி நின்றுகொண்டு சால்வை வழங்க போட்டிபோட்டதால் கோவம் அடைந்த தினகரன் கட்சியினரை கடிந்து கொண்டார். மேலும் கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்க கூறியபோது பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என கேட்ட டிடிவி தினகரன் ஆண் குழந்தை என்றதும் அஜித்குமார் என பெயர் வைத்தார்.
அதன்பின் பேசிய டிடிவி தினகரனோ... அம்மாவிற்கு துரோகம் செய்கின்ற எடப்பாடி ஆட்சி தொடர்ந்து நீடிக்காது எனவும், ஜெயலலிதா மறைந்த பிறகு சட்டமன்றத்தில் உருவப்படத்தை திறக்க கூடாது என்ற சொன்ன கட்சிகளுடனும், மணிமண்டபம் கட்டக்கூடாது என்று சொன்ன பாமகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை மானங்கெட்டவனே, வெட்கம்கெட்டவங்களே நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியுமா, ஆட்சி என்றால் என்னவென்று தெரியுமா, சட்டஒழுங்கு என்றால் என்னவென்று தெரியுமா என அன்புமணி, பன்னீர்செல்வத்தை டயர் நக்கி எனக்கூறி கீழ்தரமாக விமர்சனம் செய்து விட்டு அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார்.
தமிழக மக்கள் ஏமாந்தவர்களா, பட்டாளி சொந்தங்கள் ஏமாந்தவர்களா என்று டிடிவி கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூறிவருவது போன்று அவர்கள் அமைத்துள்ளது. மெகாகூட்டணி இல்லை, மானங்கெட்ட கூட்டணி என்று விமர்சித்த டிடிவியோ, அன்புமணி போன்று நான் பேசியிருந்தால், நடுரோட்டில் தூக்கில் தொங்கியிருப்பேன் என்றும், இளம்போராளிகள், தமிழ்போராளிகள், சமுகநீதி போராளிகள் என்று கூறிகிறார்கள். ஆனால் அது எதுவும் உண்மை இல்லை, எல்லாம் பணத்திற்காகதான் என்று அன்புமணியை தினகரன் விமர்சித்தார். மேலும் அன்புமணியை கிளை செயலாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்க்கு கை நீட்டி செம்மலை அடிக்கிறார், அதிமுக தொண்டர்க்கு அடிவிழும் நிலைதான் தற்போது உள்ளது என்று கூறினார்.