தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு என்று வந்த நிலையில் நேற்றய தினம் பாஜக கூட்டணியில் உள்ள அணைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இதில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மற்றும் சில அதிமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.நேற்று மாலை நடந்த இந்த விருந்து இரவு வரை நீடித்தது.
இந்த விருந்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக,தேமுதிக,சமக கட்சி சார்பாக அன்புமணி,பிரேமலதா விஜயகாந்த்,சரத்குமார் மற்றும் வாசன்,ஏ.சி.சண்முகமுகம் கலந்து கொண்டனர்.விருந்து முடிந்து உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகம் திரும்பினார்.தமிழக முதல்வர் எடப்பாடி டெல்லியில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் தாங்கினார்.ஆனால் ஓ.பி.எஸ். மட்டும் விருந்த நடந்த ஹோட்டலில் தங்கியதாக கூறப்படுகிறது. அதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கொடுத்த விருந்திற்கு பின் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கட்சியுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வருகிறது.இதில் அமித்ஸா தமிழக இடைத்தேர்தல் நிலவரங்களை கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை என்றால் என்ன செய்வது என்றும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறுகின்றனர்.இந்த ஆலோசனையில் பாஜகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை விட்டுவிட்டு ஓ.பன்னீர்செல்வதுடன் மட்டும் பாஜக தலைவர் அமித்ஸாவும், மோடியும் ஆலோசனை நடத்தியது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.