Skip to main content

மக்களை திசை திருப்பி வேடிக்கை பார்க்கும் அமித்ஷா...பாஜக அரசியல்!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்று கூறியிருந்தார். இந்தி திணிப்பிற்கு இதற்கு பல மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் திமுக,மதிமுக,காங்கிரஸ், விசிக மற்றும் சில அரசியல் கட்சியினர் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பாக வரும் 20ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

 

bjp



பின்பு, நம் நாடு என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டு வர முடியாது என்று  ரஜினி கருத்து தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில் அமித்ஷா, இரண்டாவது மொழி ஒன்றை கற்க வேண்டுமெனில் இந்தி கற்றால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினேன்.இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து தான் நானும் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.


இது பற்றி அரசியல் விமர்சகர்களிடம் விசாரித்த போது, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதை திசை திருப்ப அமித்ஷா இந்தி மொழி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். ஏனென்றால் தென்னிந்தியாவில் பொருளாதார பிரச்சனை அதிகமாக பேசப்பட்டது. மேலும் ப.சிதம்பரம், கர்நாடகாவில் சிவகுமார் மற்றும் எதிர் கட்சிகள் மீது வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கை இவற்றையெல்லாம் திசை திருப்ப பாஜக எடுத்த அரசியல் தான் மொழி பிரச்சனை என்றும் கூறுகின்றனர். அதோடு தமிழகத்தில் திமுக வலுவாக இருப்பதால் அவர்கள் மீது இந்தி எதிர்ப்பு செய்கிறார்கள் என்ற மாதிரி இமேஜை உருவாக்க முயற்சியையும் பாஜக கையில் எடுத்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்