சட்டமன்றத் தோ்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம், மீண்டும் அமைச்சராகிவிடுவோம் என்ற கனவோடு புறப்பட்டார் அதிமுக வேட்பாளரும், முன்னால் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன். காலை 5 மணிக்கெல்லாம் ஜீப்பை தயார் செய்து வைத்த அவா், ஜீப்பை நேரடியாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வோம்.
தேர்தல் வெற்றி காதில் விழுந்த உடன் பொதுமக்களுக்கு நன்றி சொல்லப் புறப்படுவோம் என்ற பல திட்டத்தோடு தயாரான அவருக்கு, ஆரம்பமே அலைக்கழிப்பாக மாறியது. அடடா அது என்னனு விசாரிச்சா ‘ஜீப்பை தயார் செய்து வைத்திருந்த நிலையில், வெல்லமண்டி நடராஜன் காலை ஜீப்பில் புறப்படும்போது ஜீப்பின் முன் இரண்டு சக்கரங்களும் பஞ்சர் ஆகிவிட்டது.’
உடனே வேறு வழியின்றி, நேற்று (மே 2) முழு ஊரடங்கு என்பதால், டியூப்லஸ் டயர் கொண்ட குட்டியானையை எடுத்துவந்து, அதன் சக்கரத்தில் இருந்த காற்றை ஜீப்பிற்கு மாற்றியுள்ளனா். வேட்பாளரின் ஜீப் பயணம் சொதப்பியதால், அப்செட்டான அவா் வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்றுள்ளார். ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக ஏறுமுகம் கண்ட அவா், போகப் போக 11 மணிக்கெல்லாம் மீண்டும் அப்செட் ஆகிவிட்டார். தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்ததால் அப்செட் ஆகி, தயார் செய்து வைத்திருந்த ஜீப்பை பெல்ஸ் மைதானத்தில் தார்பாய் போட்டு போர்த்தி வைத்துவிட்டார். கடைசி வரை அந்த ஜீப்ல பயணமே போக முடியல.