தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜகவுக்கும், மாநிலத்தில் திமுகவுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக அணிக்கு 35 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாஜக அணிக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிகம் இடம் கிடைக்கும் என்று ஊடங்கள் வெளியிட்டாலும், உளவுத்துறை மூலம் ஒரு ரிப்போர்ட் பாஜக மேலிடத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
அதில் பாஜகவுக்கு சாதகமாக வந்திருந்தாலும் அதன் தலைமை கொஞ்சம் அதிருப்தியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளன. கடைசி கட்ட தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளையும், விவாதத்தையும் உண்டாகியுள்ளது. இது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் உளவுத்துறையின் மூலம் அவர்கள் பெற்ற ரிப்போர்ட் வேறு விதமாக வந்துள்ளது. அதன்படி பாஜகவுக்கு தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காது, தொங்கு பாராளுமன்றமே அமைக்க முடியும் என அறிவித்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் பின்னணி என்னவென்று விசாரித்த போது, வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்தால் யார் பிரதமர் வேட்பாளர்? எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடம் கிடைத்தால் யாருக்கு பிரதமர் பதவி? எந்தெந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் என்ன இடம் என்பதையெல்லாம் பேசி இறுதி செய்து குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் அளித்துவிடாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.மேலும் மே 23ஆம் தேதி எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை திசை திருப்பவே இந்த எக்ஸிட் போல் ரிப்போர்ட் கூறப்பட்டது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகிறார்கள்.