Published on 18/09/2019 | Edited on 18/09/2019
ரஜினி எப்போது அரசியலுக்கு நேரடியாக வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது, நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்தார். நான் அரசியலுக்கு காலத்தின் கட்டாயம். வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம். அதற்கு முன்னால் நாடாளுமன்ற தேர்தல்,உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அதற்கு நாட்கள் ரொம்ப குறைவாக இருப்பதால் அதில் போட்டியிட போவதில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது ரஜினி தனது வீட்டில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழல் மற்றும் பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பாஜகவுடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்தியால், பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை என்மேல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் கூறியதாக சொல்கின்றனர். நான் ஆன்மீகப்பாதையில் செல்வேன் என்று கூறியதால், சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை விலக்கி வைக்க சிலர் முயற்சிப்பதாகவும் ரஜினி வேதனை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதோடு தான் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியதாகும் சொல்லப்படுகிறது.