தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவித்தல் என அரசியல் கட்சித் தலைமைகள் பரபரப்பாக இருந்தன. அதுமுடிந்தது, வேட்பாளர்களை அறிவித்ததும் வேட்பாளர்கள் அவர்கள் தொகுதியில் பரபரப்பாயினர். அதேபோல் கட்சியின் முக்கிய தலைவர்களும், பொறுப்பாளர்களும் அவர்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி சென்னை, வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றியழகன் இன்று தனது தொகுதியில் உள்ள ஐ.சி.எஃப். குடிசை மாற்று வாரியம், குன்னூர் சாலை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கால் பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்களுடன் தானும் இணைந்து கால்பந்து விளையாடினார்.