Published on 28/05/2019 | Edited on 28/05/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணி தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக வெற்றி பெற்றார்.இதனால் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கோரலாம் என்று ஓ.பி.எஸ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கட்சியில் உள்ள சீனியர்கள் தங்களுக்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்று கூறி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதிமுக கட்சியின் சீனியர்களான வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி,மைத்ரேயன் ஆகியோர் தங்களுக்கு ராஜ்யசபா சீட் எம்.பி வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.இதில் ஒரு சில சீனியர்கள் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க கூடாது என்றும் அதை கட்சி சீனியர்களான தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறி வருவதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி சீனியரான வைத்தியலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாஜக தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.இதனால் அதிமுக கட்சியில் மீண்டும் உட்கட்சி பூசல் ஆரம்பித்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.