எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட தமிழக கட்சிகள் எதிர்த்தாலும் ராஜ்யசபாவில் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வெற்றிபெறக் காரணமே அ.தி.மு.க. தான் என்று அதிமுகவினர் பெருமையாக கூறிவருகின்றனர். இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் படி ஈழத் தமிழர்களுக்கு இங்கே குடியுரிமை மறுக்கப்படுது. இந்துக்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்படுது. முஸ்லிம்களை சுத்தமாக இந்த மசோதா ஒதுக்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இப்படிப்பட்ட குடியுரிமை மசோதாவை எதற்காக அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும் சிறுபான்மைச் சமூகத்தினர்களும் கொந்தளிப்பில் இருப்பதாக கூறுகின்றனர். இது பச்சைத் துரோகம் என்று ஹாட்டாவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மேலும் முஸ்லிம்களுக்கு சிக்கலை உண்டாக்கும் இந்தத் தீர்மானத்தை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் எம்.பி.யான முகமது ஜானும் ஆதரித்து வாக்களித்தது தான் கொடுமை என்கின்றனர். ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத முதல்வர் எடப்பாடி, நாம் ஆதரிக்காமல் இருந்து இருந்தால் ராஜ்யசபாவில் இந்த குடியுரிமை மசோதா தோற்று போயிருக்கும் என்று பெருமிதம் பொங்க மார்தட்டிக்கிறார் என்று கூறிவருகின்றனர். அ.தி.மு.க.வினர் எதிர்த்து வாக்களித்திருந்தால் 2 ஓட்டுகளில் மசோதா தோல்வியடைந்திருக்கும். ஆனால், பா.ஜ.க.வின் பிடியில் இருக்கும் போது அவர்களால் எப்படி எதிர்த்து வாக்களித்திருக்க முடியும் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.