பிரதமர் மோடி பேசியது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்.பாதுகாப்புக் கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழை மக்களின் வாழ்வாதாரம்,வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்" என்று விமர்சனம் செய்து இருந்தார்.
சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது. வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது. அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை. அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு. இதில் அரசியல் எதற்கு⁉️உங்கள் ஆலோசனைகளை பிரதமரிடமே தெரிவிக்கலாமே.@narendramodi https://t.co/jqBEdnW2Gf
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) April 4, 2020
இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும்,நடிகருமான கமல் தெரிவித்த கருத்துக்கு விமர்சனம் செய்துள்ளார்.அதில், சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது.வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது.அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை.அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு.இதில் அரசியல் எதற்கு?உங்கள் ஆலோசனைகளைப் பிரதமரிடமே தெரிவிக்கலாமே என்று கூறியுள்ளார்.இந்தக் கருத்துக்கு கமலின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.