Skip to main content

"தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை"... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு! 

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

அண்மையில் மதுரை ரயில்வே கோட்டப் பணியில், பொறியியல் பிரிவில் பணியில் அமர்த்தப்பட்ட 189 பேரில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவிகித பேரும், வட மாநிலத்தவர் 70 சதவிகித பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். பின்பு இரண்டாம் கட்ட பணியான தண்டவாள பராமரிப்பு பணியில் அமர்த்தப்பட்ட 262 பேரில், 223 பேர் வடமாநிலத்தவரும், 39 பேர் மட்மே தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். மற்ற இதர பிரிவில் பணியில் அமர்த்தப்பட்ட 89 பேரில், 84 பேர் வடமாநிலத்தவரும், 5 பேர் மட்மே தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் ரயில்வே தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக இளைஞர்களின் திறமையின்மை தான் காரணம் என்று அதிமுக அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

admk



மேலும் பல தகுதி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் வெற்றி விகிதம் என்பது குறைவாக உள்ளது வருத்தமளிக்கிறது என்றும் பேசியுள்ளார்.இதனால் நம்மளுடைய தேர்ச்சி விகிதத்தை முழுமையாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து தெரிவித்துள்ளார். வடமாநிலத்தவரை தமிழகத்தில் அதிகம் பேரை நியமிப்பதன் மூலம் இந்தி திணிப்பு நடைபெறுவதாக எதிர்க் ட்சித் தலைவர் ஸ்டாலினும், மதிமுக பொது செயலாளர் வைகோவும் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து வடமாநிலத்தவரை நியமிப்பதால் தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்பு குறைகிறது என்று எதிர்கட்சியினரும், மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு அதிமுக அமைச்சரின் கருத்துக்கு இளைஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்