Published on 30/07/2019 | Edited on 30/07/2019
எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த்தனர். இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார். அப்போது, முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து தவறு என்று கூறினார்.
வேலூர் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக இந்த முடிவு எடுத்துள்ளது.முத்தலாக்கினால் பெண்கள் உரிமை பாதிக்கப்படுகிறது என்பது தெரிந்தும் எதிர்க்கின்றனர். ஓட்டுக்காக முத்தலாக் மசோதா ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். திமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக கொலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றனர். அக்கட்சியில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் மன உளைச்சலில் உள்ளனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழிசையின் இந்த கருத்தால் அதிமுக, பாஜக தொண்டர்கள் குழம்பி உள்ளனர். ஒரே கூட்டணிக்குள் முத்தலாக் மசோதாவிற்கு பாஜக கட்சி ஆதரவும், அதிமுக கட்சியில் இரண்டு விதமான நிலைப்பட்டால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.