கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது பேசிய அவர், நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார். இந்த கருத்துக்கு சினிமா துறையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். பின்பு திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவில் நீக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருந்தனர். இதனையடுத்து சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி இணைந்தார். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் இன்று காலை பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் நமீதா பாஜகவில் இணையபோகிறார் என்ற தகவல் வெளி வருகிறது. நடிகை நமீதா ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். அப்போது அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார். தேர்தல் நேரங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் நமிதாவும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலீயல் தமிழகம் வந்துள்ள பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகை நமீதா இணைய உள்ளதாக கூறிவருகின்றனர்.மேலும் இன்று ஒரே நாளில் அதிமுகவில் இருந்து ராதாரவி காலையில் இணைந்தார். தற்போது நடிகை நமிதாவும் இணைய உள்ளது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.