நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு தரும் வகையில் பல உதவிகளை செய்து வருகிறார் என்று அனைவரும் அறிந்தது. அதோடு அவர் நடிக்கும் படங்களுள் மாற்று திறனாளிகளின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் வாய்ப்பும் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் ரஜினி நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான லாரன்ஸ் கலந்துகொண்டார். அப்போது ரஜினியின் அரசியல் வருகையை விமர்சிப்பவர்கள் குறித்து பேசினார்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/tFeEfbatWULLua8RJy3i6bBbOVQ-6nlEC_VfVKBHzfQ/1575891288/sites/default/files/inline-images/858_0.jpg)
சென்னையில் இன்று (09.12.2019) திரைப்பட நடிகரும், சமூக சேவகருமான திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள் குறித்து கலந்துரையாடினார். pic.twitter.com/2T4PqJff2X
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) December 9, 2019
இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில், குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள் குறித்து அமைச்சரிடம் கலந்து உரையாடியதாக கூறுகின்றனர். இதை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.