நித்தியானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கை, இனி ராம்நகர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் நித்தியால் பாதிக்கப்பட்ட லெனின் கருப்பன் முறையிட்டார். தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, நித்தியானந்தாவையும் அந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான பக்தானந்தாவையும் விரைவில் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்நகர் நீதி மன்றத்துக்கு உத்தரவைப் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக நித்தி மற்றும் பக்தானந்தா ஆகியோரின் சொத்துக்களை முடக்கும்படி ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனால், பொருளாதார நெருக்கடியில் சிக்கலில் திணறப் போகிறது நித்தி தரப்பு என்கின்றனர். நித்தியானந்தாவால் இனி அதிக நாள் தலைமறைவாக இருக்க முடியாது என்று பிடதி ஆசிரம ஆட்களே பதட்டமாக கூறுகிறார்கள்.