Published on 31/01/2020 | Edited on 31/01/2020
புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டியில் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி இல்ல திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், மணமக்கள் அதிமுக பாஜக கூட்டணி போன்று அடிமையாக இருக்கக் கூடாது என்றும், ஒருவருக்கு ஒருவர் உரிமையை விட்டுக் கொடுக்காமல் வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆமாம். திமுக மதிமுக மாதிரி கூட்டணியா இருந்தா எப்படி வேணா அடிச்சுக்கலாம் அசிங்கமாதிட்டிக்கலாம். பிரிஞ்சு வேற கூட்டணிக்கு போய் வாழ்ந்திட்டு மறுபடியும் வந்து சேந்துக்கலாம். முன்னோர் பெரியோர் அதானே சொல்லிக்கொடுத்திருக்காங்க. வால்க தமில் கலாச்சாரம். https://t.co/LuMe5pJnGS
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) January 30, 2020
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஆமாம். திமுக மதிமுக மாதிரி கூட்டணியா இருந்தா எப்படி வேணா அடிச்சுக்கலாம் அசிங்கமாதிட்டிக்கலாம். பிரிஞ்சு வேற கூட்டணிக்கு போய் வாழ்ந்திட்டு மறுபடியும் வந்து சேந்துக்கலாம். முன்னோர் பெரியோர் அதானே சொல்லிக்கொடுத்திருக்காங்க. வால்க தமில் கலாச்சாரம்" என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.