Skip to main content

வெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரசு முறை பயணமாக முதல் முறையாக செல்கிறார். வருகிற 28-ந்தேதி சென்னையில் இருந்து லண்டன் செல்லும் அவர், செப்டம்பர் 9-ந்தேதி சென்னை வருகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் லண்டனுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் உடன் செல்கிறார்கள்.

 

admk



எடப்பாடியின் அமெரிக்க பயணம் குறித்து மேலும் விசாரித்தபோது, உலக முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு வரவழைக்கவே இந்த வெளிநாட்டு பயணம் என சொல்லப்பட்டாலும், சில தனிப்பட்ட விவகாரமும் அதில் அடங்கியிருக்கிறது என்கிறது தொழில்துறை வட்டாரம். இந்த பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது, திமுக கடந்த 8 வருடங்களாகவே ஆட்சியில் இல்லை. அதிமுகதான் ஆட்சியில் இருந்துவருகிறது. ஆனால் நாம்தாம் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் பேசி வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றக் கூடிய கட்சி திமுக தான். மோடி வெளிநாடுகளுக்கு செல்வது போல எடப்பாடி பழனிச்சாமியும் வெளிநாடு செல்கிறார். 


முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாடு செல்கிறார் என்று சொல்கிறார்கள். முதலீடுகள் யாருக்கு ? நாட்டுக்கா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை அதிகாரிகளே கவனிப்பார்கள். எனது பொறுப்பை எந்த அமைச்சரிடமும் கொடுக்கவில்லை என்றும் கூறினார். இதனால் அதிமுகவில் நிலவும் குழப்பங்களை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து பல்வேறு கட்சிகள் விமர்சனங்களை கூறிவருகின்றனர். 

சார்ந்த செய்திகள்