கர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கரோனா உறுதி செய்யப்பட்ட எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், எடியூரப்பாவைத் தொடர்ந்து அவரது மகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை, அவருக்கும் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, எடியூரப்பா சிகிச்சை பெறும் அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.