Published on 25/03/2021 | Edited on 25/03/2021

இந்தியாவில் கரோனா பரவல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா இரண்டாவது அலையை நோக்கிச் செல்வதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 53,476 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதிக்குப் பிறகு முதன்முதலாக, ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்துக்கு வரும் பிற மாநிலத்தவர்கள் கட்டாயம் கரோனா சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.