பெண் பத்திரிகையாளர் பெங்களூரில் சுட்டுக்கொலை
மூத்த பத்திரிக்கையாளரும், விமர்சகருமான கெளரி லங்கேஷ் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார் .
இந்துத்துவா கருத்துக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த கன்னட பெண் பத்திரிக்கையாளர் கவுரி லிங்கேஷ் என்பவர் மர்ம நபர்களால் பெங்களூரூவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மதவாத சக்திகளை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் தீட்டி, விளம்பரங்கள் இன்றி பத்திரிகை நடத்தி வந்த நிலையில், அவதூறு வழக்கை சந்தித்த நிலையில், மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 3 குண்டுகள் உடலில் பாய்ந்துள்ளது.