டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைத்தது யார் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டிசம்பர் 15 ஆம் தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பான வழக்கின் விசாரணையில், ஜாமியா போராட்டம் அமைதியாக நடந்தது என்றால் பேருந்து மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு தீ வைத்தது யார்? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் போராட்டங்கள் எங்கு ஆரம்பித்தது என கேட்கவில்லை விளைவுளை பற்றியே கேட்க விரும்புகிறோம் எனவும் கூறியுள்ளது.