இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை (27.04.2021) இரவு முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.
இந்தநிலையில் மத்திய நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (ஆரோக்யம்) டாக்டர் வி.கே பால், கரோனா சூழ்நிலையை தொடர்பாக செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர், வளர்ந்து வரும் சூழ்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகம் குறையுமாறு நாம் விடமுடியாது. உண்மையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் வேகத்தை அதிகரிக்க வேண்டும்" என தெரிவித்தார்
தொடர்ந்து அவர், மாதவிடாய் காலத்தில் பெண்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாமா என்பது குறித்து கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு பதில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான். மாதவிடாய்க்காக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தள்ளிவைக்க எந்த காரணமும் இல்லை" என கூறியுள்ளார்.
டாக்டர் வி.கே பால் மேலும் கூறுகையில், "இந்த கரோனா சூழ்நிலையில், தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிருங்கள். குடுமபத்தினரிடையே இருந்தாலும் முகக்கவசம் அணியுங்கள். வீட்டிற்கு யாரையும் அழைக்காதீர்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.