வவ்வால் நிபா வரைஸை பரப்புகிறது. வவ்வால் கடித்த பழத்தை சாப்பிடாதீர்கள் என்று சமீப நாட்களாக நம்மை இங்கே அச்சுறுத்துகிறார்கள்.
ஆனால், அசாம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வவ்வால் குகையை கோவிலாக வணங்குகிறார்கள். மத்திய அசாமில் உள்ள பாமுனி மலையில் உள்ள இந்த வவ்வால் குகை குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன.
இந்தக் குகையில் பழந்தின்னி வவ்வால்கள், பூச்சிகளை தின்னும் வவ்வால்கள் என பலவிதமான வவ்வால்கள் இருப்பதாக கூறுகிறார்கள். உள்ளே எளிதில் நுழைய அனுமதி கிடையாது. எப்போதேனும் ஒரு குறிப்பிட்ட திருவிழா நாளில் சத்தமே போடாமல், வெளிச்சத்தை ஏந்தாமல் உள்ளே செல்ல அனுமதி இருக்கிறது.
ஒருமுறை துறவி ஒருவர் பெண்கள் ராஜ்ஜியத்தில் சிக்கிக் கொண்டார். அவரைத் தேடிவந்த அவருடைய சீடர் துறவியைக் கண்டுபிடித்தார். பின்னர் அந்த பெண்களை வவ்வால்களாக சாபம் கொடுத்தார் என்று ஒரு கதை இருக்கிறது.
இயற்கையை சீரழித்த கிராமமக்களை கடவுளே வவ்வால்களாக சபித்ததாக ஒரு கதை இருக்கிறது. இந்தக் கதைகள் ஒருபக்கம் இருந்தாலும், மலையை பாதுகாக்கும் கடவுளாகவே இந்த வவ்வால்களை கருதுவதாக பகுதி மக்கள் கருதுகிறார்கள். குகையின் முன் இப்போது ஒரு கோவிலை கட்டியிருக்கிறார்கள்.